முதலமைச்சருக்கும் முன்பள்ளி ஆசிரியைகளுக்குமிடையிலான சந்திப்பு

0
449

(எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்)

ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள முன் பள்ளி ஆசிரியைகளுக்கும் முதலமைச்சருக்குமிடையிலான சந்திப்பு இன்று 15.10.2016ம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக் கட்டட மண்டபத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், முன்பள்ளி ஆசிரியைகளைச் சந்திக்க வருகை தந்திருந்த முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்கள், முன் பள்ளி ஆசிரியைகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், தேவைப்பாடுகள் குறித்த அனைத்து விடயங்களையும் கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளையும் விரைவில் பெற்றுத் தருவதாகும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், முன்னாள் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைத்தவிசாளர் KBS.ஹமீட், கோரளைப்பற்று மத்தி பிரதேச சபை செயலாளர் மற்றும் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் மற்றும் வாகாரை பிரதேச சபை செயலாளர், முதலமைச்சரின் மட்டு.மாவட்ட மட்டக்களப்பு இணைப்புச்செயலாளர், முன்னாள் தவிசாளர் நாஸர், முதலமைச்சரின் சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY