நேற்று காஷா .. இன்று அலப்போ நாளை நாமாக கூட இருக்கலாம்

0
306

-முஹம்மது ராஜி-

“இஸ்லாத்துடன் பிரான்ஸுக்கு பிரச்சினை உள்ளது ” சொன்னது வேறு யாரும் அல்ல பிரான்ஸின் தற்போதய ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே . இவ்வாரம் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் இதை அவர் தெரிவித்துள்ளார்

முன்னால் புன்னகை கொண்ட வாயையும் பின்னால் வாள் கொண்ட வாலையும் வைத்திருப்பது என்பது இஸ்லாமிய வரலாற்றில் ஐரோப்பிய நாடுகள் கையாளுகின்ற உபாயம்.

ஸ்பெயினை முஸ்லிம்கள் ஆண்ட 800 கும் மேற்பட்ட ஆண்டுகளில் எத்தனை படையெடுப்புக்கள்..! எத்தனை யுத்தங்கள் ..! சிலுவைப்போர் என்கிற முகமூடிக்குள் தான் எத்தனை இரத்த வரலாறுகள் .?

கிறிஸ்தவம் என்கிற போர்வையில் ஆதிக்கம் செலுத்துவதில் வேகாத பருப்புகள் இப்போது மனித உரிமை , பெண்ணுரிமை , ஜனநாயகம் என்கிற போர்வையில் முஸ்லிம் நிலங்களுக்கு ள் யுத்தங்களாக திணிக்கப்பட்டு வருகின்றன .

இவற்றை நியாயப்படுத்த கூட்டாக கூறப்பட்டு வரும் சொற்பிரயோகம் “மேற்கத்திய பெறுமதி ‘.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாத்துக்கும் -மேற்குக்கும் இடையிலான மத ,கலாசார ,பண்பாட்டு மோதல்கள் இருந்து வந்துள்ளன

முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது ஸ்பெயினை கைப்பற்ற ஐரோப்பிய நாடுகள் தொடுத்த பல யுத்தங்கள் தோல்வியை தழுவியமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று , அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகளும் மோதல்களும் ஆகும்.

கலீபா கலிபா அப்துர் ரஹ்மான் உட்பட பலர் அந்த வேறுபாடுகளை கட்சிதமாக பயன்படுத்தி ஆட்சிகளை விரிவாக்கினார்கள் , கைப்பற்றிய பகுதிகளை தக்க வைத்துக்கொண்டார்கள் .

இஸ்லாமிய ஸ்பெயினுக்கு எதிராக ஐரோப்பிய மன்னர்கள் எப்போது ஒன்று சேர்ந்தார்களோ அது முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது .

அதன் பின்னர் பிரித்தாளும் தந்திரத்தை வைத்து கூறுபோட்டு ஆட்சிகளை தக்க வைத்துக்கொள்ளும் தந்திரத்தை கையாண்ட ஐரோப்பா , சர்வதேச மட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது .

காலனித்துவத்தின் ஆரம்ப காலத்தில் ஒரே நிலமாக இருந்த முஸ்லிம் உம்மாவை பிளவு படுத்த காலனித்துவம் கையாண்ட தந்திரோ பாயம், தேசியவாதம் என்கிற நச்சுவிதையை ஊட்டியதுதான் . அது வேர் விட்டு மரமாகி கிளை பரப்பி இன்று ஒவ்வொரு முஸ்லிம்களின் மனதில் இன்று குடி வாழ்கின்றது .

அது முஸ்லீம்களை கூறு போட உதவியது . அதில் அரைவாசி வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக இஸ்லாத்தை கூறு போட காரணம் தேடினார்கள் .

இப்போது கையாளப்பட்டிருக்கும் தந்திரம், மிதவாதம் அல்லது பயங்கரவாதம் எனவும் நவீன வாதம் அல்லது சீர்திருத்த வாதம் எனவும் மார்க்கத்தை இரு பிரிவாக பிளவு படுத்தி கூறு போட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது .அந்த வலைக்குள் நாம் ஒவ்வொருவரும் இப்போது சிக்கிக்கொண்டுள்ளோம் .

சீர்திருத்த வாதம் எப்படி கிறிஸ்தவத்தை சீரழித்து அழிவின் எல்லைக்கு கொண்டு சென்றுள்ளதோ அதையே முஸ்லிம்களுக்குள் புகுத்த கடும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது .

பயங்கர வாதத்தை முறியடிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசுக்கு கொள்கை வகுப்பிலும் தீர்மானம் எடுத்தலிலும் ஆலோசனை வழங்கும் திங் டாக்ங் அமைப்பான ராண்ட் கோப்றேசன் அமைப்பின் மூத்த ஆரய்ச்சியாளர் செரில் பெர்னார்ட் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளில் இஸ்லாத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனபதும் ஒன்றாகும்.

நமக்குள் இருக்கும் பிரதேசவாதம் ,தேசியவாதம் போன்ற பிரிவுகளை நம்முக்குள் இருந்து களைந்து எறிகின்ற வரை எங்கோ ஒரு மூலையில் நாம் வேட்டையாடப்பட்டுக் கொண்டேதான் இருப்போம் . நேற்று காஸா இன்று அலப்போ நாளை நாமாக கூட இருக்கலாம்.

LEAVE A REPLY