BCAS Campus பெற்றுக் கொண்ட தெற்காசிய விருது!

0
68

(ஜுனைட்.எம்.பஹ்த்)

“தொழிற்சந்தைக்கேற்ற கற்கை நெறிகளை வழங்கும் மிகச் சிறந்த கல்வி நிறுவனம்” என்ற தெற்காசிய விருதினை BCAS Campus உயர்கல்வி நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.

நேற்று (13.010.2016) கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற SAPS (South Asian Partnership Summit) & Business Awards என்ற விருது வழங்கும் நிகழ்வின் போதே இந்த சிற்ப்பு விருதானது BCAS Campus நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் இயங்கும் பல்வேறு தொழிற் துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்புக்களையும் சிறப்புக்களையும் மதித்து கௌரவித்து பாராட்டுமுகமாக SAPS Business Awards எனும் விருதுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையிலேயே இந்த வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு இம்முறை இலங்கையில் நடை பெற்றது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் , பங்களாதேஸ், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான்
உள்ளிட்ட எட்டு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் பங்குபற்றிய
போட்டிக்கு மத்தியில் கல்வித்துறையில் இந்த சிறப்பு விருதினை BCAS Campus பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கையின் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் BCAS Campus க்கு மாத்திரமே இந்த சிறப்பு தெற்காசிய விருது கிடைத்துள்ளது என்பது விசேடமாக குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இலங்கையில் தனியார் உயர் கல்வித்துறையில் கடந்த 18 வருட காலங்களாக முன்னோடி நிறுவனமாக முன்னணியில் திகழும் BCAS Campus நிறுவனம் தொழிற் சந்தைக்கேற்ற பிரயோக கற்கை நெறிகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்கின்றது. Computing, Engineering, Quantity Surveying (QS), Business, Law மற்றும் Bio Medical Sciences ஆகிய துறைகளில் அடிப்படைப் பாட நெறி முதல் பட்டப்படிப்பு மற்றும்
முதுமாணிப் பட்டமென பல தரங்களிலும் BCAS Campus உயர் கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

இப்பாட நெறிகள் அனைத்தையுமே தொழிற் சந்தைக்கேற்ற வகையில் விசேடமாக வடிவமைத்து வழங்குவது மாத்திரமின்றி தொழிற் சந்தையில் எதிர்பார்க்ப்படும் திறன்களையும் (Skills) உளப்பாங்கினையும் (Attitude) மாணவர்களுக்கு வழங்குவதில் BCAS Campus தனியான கவனம் செலுத்துகின்றது. அதுபோலவே, பல்வேறு துறைகளிலுமான முன்னணி தொழில் நிறுவனங்களுடன் நெருக்கமான தொடர்பையும், இணைப்பையும் BCAS கொண்டுள்ளது.

இதன் காரணமாக BCAS Campus வழங்கும் உயர் கல்வி வாயப்புகள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்ந்த தொழில் வாயப்புக்களைப் பெற்று தத்தமது தொழிற்துறைகளில் முன்னணியில் திகழ்கின்றனர். தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் வழங்கப்பட்டுள்ள இந்தப் பங்களிப்புக்களை மதித்து கௌரவிக்கும் வகையிலேயே இந்த விசேட தெற்காசிய விருது BCAS Campus க்கு கிடைத்துள்ளது.

இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்கள் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து பகிரங்கமாக கோரப்பட்டிருந்தன.

பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏராளமான நிறுவனங்கள் இந்த விருதுகளுக்காக இம்முறை விண்ணப்பித்திருந்தன. இலங்கையிலிருந்தும் அதிகமான நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

இந்தப் போட்டிகளுக்கு மத்தியிலேயே “தொழிற்சந்தைக்கேற்ப கற்கை நெறிகளை வழங்கும் மிகச் சிறந்த கல்வி நிறுவனம்” என்ற விருது BCAS Campus க்கு இம்முறை கிடைத்துள்ளது.

BCAS Campus தனது உயர்கல்வி பாடநெறிகளை Pearson (Edexel UK), University of Wolverhampton மற்றும் London SouthBank University ஆகிய வற்றுடன் இணைந்து வழங்கி வருகின்றது.

இப்பாட நெறிகளை கொழும்பு மற்றும் கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள BCAS Campus பிரதான வளாகங்களிலும், மற்றும் கண்டி, யாழ்ப்பாணம், கல்முனை, மட்டக்களப்பு,குருநாகல் உள்ளிட்ட ஏனைய பல பிராந்திய வளாகங்களிலும் மாணவர்கள் தொடரமுடியும்.

மேலதிக தொடர்புகளுக்கு 0773114105 ஆகிய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

LEAVE A REPLY