காத்தான்குடி ஆற்றங்கரைப் பூங்கா அபிவிருத்தி பணிகளை முபீன் பார்வையிட்டார்.

0
144

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேண்டுகோளின் பெயரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபிழ். நசீர் அஹமட் அவர்களினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக்  வழிகாட்டலில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் காத்தான்குடி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தினை நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினுடைய இணைப்புச்செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் பார்வையிட்டார்.

மேலும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் காத்தான்குடி ஆற்றங்கரையில் பாரிய பூங்கா அபிவிருத்தி வேலைகள் நடைபெறவுள்ளதையும் இதன் பொது நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினுடைய இணைப்புச்செயலாளர் முபீன் நினைவு படுத்தினார்.

LEAVE A REPLY