மீள் குடியேற்றம் தொடர்பில் அரசு அதிகாரிகள் அக்கறை காட்டுவது கிடையாது

0
151

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ‘கன்னியா ‘ பிரதேசம் வெந்நீர் ஊற்றின் காரணமாக பிரசித்தி பெற்ற இடமாகும். இந்த பிரதேசத்தில் யுத்தம் ஆரம்பித்த போது 112 குடும்பங்கள் குடியிருந்தன.

அசாதாரண சூழ்நிலையால் வெளியேறிய அம்மக்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வசித்து வருகின்றார்கள். இவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அரசு அதிகாரிகள் அக்கறை காட்டுவது கிடையாது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

கன்னியாவிலிருந்த பள்ளிவாசல் சேதமடைந்த நிலையில் உள்ளது.மேலும் அதன் மலையுச்சியில் இருக்கும் சியாரத்திற்கும் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. முஸ்லிம்கள் தொன்மமாக அங்கு வாழ்ந்தனர் என்பதற்கும் இது ஒரு அத்தாட்சியாகும்.

இந்த பிரதேச 10 ஏக்கர் காணிகளுக்கான உறுதியும் என்.சீ.றோட் பள்ளியின் பொறுப்பில் உள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த பாதிக்கப்கட்ட சமூகத்திற்கு சொந்தமான பூர்வீக நிலங்களில் அம்மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுப்பவர் யார் எனவும் அப்பகுதியிலிருந்த மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

LEAVE A REPLY