(Poem) இடி

0
80

(Nizous)

ஆட்டிலறித் தாக்குதலை
ஆகாயம் தொடுக்கும்.
ஊட்டுக்குள் இருந்த
உபகரணம் வெடிக்கும்.

போட்டுவைத்த ரவுட்டர்
டேட்டா தர மறுக்கும்
லேட்டஸ்ட் மொடல் டிப்
லேட்டாகி மெல்ல விழும்.

முழக்கத்தில் Wi-Fiல்
முக நூல்பார்க்கிறீயா
பிளக்கக் கழற்றலையா
பெருசுகள் கத்தும்.

கட்டிலில் படுத்த பிள்ளை
கட்டிக் கொள்ள தாய் தேடும்
ஒட்டிக் கொண்டு உம்மாவில்
உறங்கி சுகம் காணும்.

ஏதேதோ ஓதல்கள்
ஸ்பீட்டாய் அரங்கேறும்
நாதாவை அழைத்து சிலர்
நாவாலே ஷிர்க் செய்வார்.

மின்னலுடன் இடி சேர்ந்து
பின்னிப் பிடலெடுக்கும்.
திண்ணையில் இருக்கின்ற
ஜன்னல் flash அடிக்கும்.

இடியும் மின்னலும்
ஏதும் துயர் தந்திடாமல்
அடியாரைக் காப்பாற்ற
ஆண்டவன் துணைசெய்வான்.

LEAVE A REPLY