ஜனாதிபதியும், பிரதமரும் இன்று நாட்டில் இல்லை

0
193

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜியத்திற்கும் இன்று சனிக்கிழமை விஜயம் மேற்கொள்ள உள்ளனர்.

பெல்ஜியம் செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி எஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுக்க உள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதே~; இரு நாடுகளுக்கும் சம காலத்திலேயே ஜி எஸ் பி வரிச்சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்தச் சலுகை மனித உரிமை விவகாரங்களின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டு மீளப் பெறப்பட்டது.

இதன் காரணமாக ஏற்றுமதியில் பாரிய நெருக்கடியான சூழலை இலங்கை சந்தித்த நிலையில் , பங்களாதே~; இந்தச் சலுகையைப் பயன்படுத்தி தமது ஏற்றுமதியில் முன்னேற்றம் கண்டது.

பெல்ஜியத்திற்கான பிரதமரின் விஜயம் ஜி எஸ் பி வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் , இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை இந்தியா செல்கின்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி உள்ளிட்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

பதவி ஏற்று கடந்த ஒன்றரை வருடத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு செல்லும் மூன்றாவது சந்தரப்பம் இதுவாகும்.

இலங்கை – இந்திய இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் உள்ளிட்ட தெற்காசிய வலய விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பு சந்திப்புகளின் போது கலந்துரையாடப்பட உள்ளது.

அது மாத்திரமன்றி வருட இறுதிக்குள் இந்தியாவுடன் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஜனாதிபதியுடன் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம , வெள்விவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட உயர் மட்ட குழுவும் செல்லவுள்ளது.

LEAVE A REPLY