தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பாரட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

0
179

20161014_205429(எச்.எம்.எம். பர்ஸான்)

மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் நிருவாக சபையின் ஏற்பாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பாரட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்றிரவு 2016.10.14ஆந்திகதி வெள்ளிக்கிழமை இஷாத்தொழுகையின் பின் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

மீரா ஜூம்ஆப்பள்ளிவாயல் நிருவாக சபையின் தலைவரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட்டின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி, கௌரவ அதிதியாக கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எம்.எல்.எம். ஜூனைட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

20161014_204052அத்துடன், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சகப்பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில், மீராவோடை பிரதேசத்தையண்டிய மீராவோடை அமீர் அலி வித்தியாலயம், மீராவோடை உதுமான் வித்தியாலயம், மாஞ்சோலை அல்-ஹிறா வித்தியாலயம் மற்றும் செம்மன்ணோடை அல்-ஹம்றா வித்தியாலங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 43 மாணவ, மாணவிகளும், கற்பித்த ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

20161014_204051

LEAVE A REPLY