திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கில்

0
356

2(வாழைச்சேனை நிருபர்)

வாழைச்சேனை பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று (13) வியாழக்கிழமை காலை வைக்கோல் ஏற்றிக்கொண்டுவந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, திடீரென்று தீப்பிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனேரிப் பிரதேசத்திலிருந்து கிரான் பிரதேசம் நோக்கி குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், வைக்கோலையும் கொண்டுசென்றுள்ளனர் இதன்போது, மோட்டார் சைக்கிளின் புகைபோக்கியினுள் வைக்கோல் உட்புகுந்ததால் தீப்பற்றிக் கொண்டுள்ளது தீ பிடிப்பதைக் கண்ட மேற்படி இருவரும் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டு தப்பியுள்ளனர்.

குறித்த இருவருக்கும் எந்தவித ஆபத்தின்றி தப்பியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 01

LEAVE A REPLY