“ஒரு காலத்தில் இப்பாடசாலையை மூட முயன்றனர்” இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
348

img-20161014-wa0048(எம் எஸ் எம். சுஜா)

காத்தான்குடி சாவியா மகளிர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் ALU. நஹீமா சலாம் தலைமையில் இன்று (14) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

பரீட்சைகள் மற்றும் ஏனைய கல்விசார் செயற்பாடுகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை கெளரவிக்கும் நோக்கில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புழ்ழாஹ் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,

ஒரு கால கட்டத்தில் இந்த பாடசாலையை மூடுவதற்கு முயற்சிகள் நடந்தது. ஆயினும் அவை அப்போதே முறியடிக்கப்பட்டது.

img-20161014-wa0045

இன்று நிலை மாறியுள்ளது, இந்த பாடசாலையில் மாணவர்கள் கல்வி ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளனர். இதனைப்ப்பார்த்து தான் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் பாடசாலையின் வளர்ச்சியில் பங்கெடுத்த அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டினார்.

இப்பரிசளிப்பு விழாவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச் சித்தி பெற்ற மாணவிகளுக்கும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்கள், சாண்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை காலங்களில் திறமையாக செயற்பட்ட மாணவிகளுக்கும் தவணைப் பரீட்சைகளில் முதல் நிலைகளைப் பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது .

இவ்விழாவில் வலயக் கல்விப் பணிப்பாளர் MI சேகுஅலி , கோட்டைக் கல்விப் பணிப்பாளர் M.A.C.M.பதுர்தீன், ஹிறா பௌண்டேஸனுடைய செயலாளர் A.L.M. மும்தாஸ் மதனி உட்பட பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

img-20161014-wa0046

LEAVE A REPLY