கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேணடும்

0
157

ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் இசாக் ரீட்டா மற்றும் கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (14) இடம்பெற்றது.

இன்று முற்பகல் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சிறுபான்மையினரின் நலன் குறித்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கிழக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவித்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழி வகுக்கவேண்டும் என முதலமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்போரினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினத்தவரான முஸ்லிங்கள் மற்றும் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம் படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மட் தெரிவித்தார்.

அத்துடன் புதிய அரசியல் திருத்தின் ஊடாக சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதுவரை காலமும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவதில் இருந்த இழுத்தடிப்பு நிறுத்தப்பட்டு உடனடியாக எவ்வித பேச்சுவார்த்தைகளுமின்றி மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்கள் முழமையாக வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கில்பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மையினரிடயே தலைவரித்தாடும் வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றினாலயே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்
ஊடகப் பிரிவு

LEAVE A REPLY