அல்-உமர் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா!

0
208

whatsapp-image-2016-10-14-at-10-23-15-pm-1(NFGG ஊடகப் பிரிவு)

காத்தான்குடி அப்ரார் பிரதேசத்தில் அமைந்துள்ள அல்-உமர் பாலர் பாடசாலையின் 14ஆவது வருடாந்த விளையாட்டு நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இன்று (14.10.2016) பிற்பகல் NFGGயின் அப்றார் பிரதேச கல்வி மைய வளாகத்தில் நடை பெற்ற இவ்விளையாட்டு நிகழ்வானது உமர் சனச மூக நிலையம் மற்றும் பாலர்பாடசாலையின் தலைவர் AL.நவ்பர் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இதில் கௌரவ அதிதியாக முன்னாள் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மர்சூக் அஹமட் லெவ்வை அவர்களும் விசேட அதிதிகளாக இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடியின் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றான அப்றார் பிரதேசத்தில் இயங்கி வரும் அல்-உமர் பாலர் பாடசாலையானது அப்பிரதேசத்தில் அமைந்துள்ள NFGG யின் கல்வி மையத்தில் இயங்கி வருகிறது. மிகவும் வறுமையான பின்னணியைக் கொண்ட மாணவர்களைக் கொண்டியங்கும் இப்பாடசாலையினை தொடர்ந்தும் கொண்டு நடாத்துவதற்கு இடமில்லாத நிலையில் மூடப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட போது, தமது கல்வி மையத்தில் நடாத்துவதற்கான வசதிகளை NFGG செய்து கொடுத்திருந்தது. அன்று முதல் இப்பாடசாலையானது தொடர்ந்தும் அந்த இடத்திலேயே நடை பெற்று வருகிறது.

whatsapp-image-2016-10-14-at-10-23-10இந்நிகழ்வின் போது உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்,
‘அப்றார் பிரதேச மக்களின் கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாட்டு விடயங்களில் NFGG மிகவும் கவனம் செலுத்துவதாகவும் இப்பிரதேச மக்களின் எதிர்காலம் பற்றிய உயர்ந்த இலட்சியங்களும் திட்டங்களும் தம்மிடம் இருப்பதாகவும் அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய சூழ்நிலைகளையும் வாய்ப்புக்களையும் இறைவன் ஏற்படுத்தித் தர வேண்டும் என எல்லோரும் பிராத்திக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் பிரதம அதிதியினாலும் கௌரவ அதிதியினாலும் மாணவர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நகழ்வில் உமர் சனசமூக நிலையத்தின் செயலாளர் MM பாறூக், முன்னாள் தலைவர் AWM சாஜித், உப தலைவர் MIM நாசர் , மற்றும் MHM உவைஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு NFGGயினர் காத்தான்குடி பிரதேச உறுப்பனர்களான KMA காதர், S அலாவுத்தீன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

whatsapp-image-2016-10-14-at-10-23-09

LEAVE A REPLY