புத்தளம் பனையடிச்சோலையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: முஹம்மது சதாம் என்பவர் வபாத்! இன்னாலில்லாஹ் …

0
462

Killed by knife(MS. முஹம்மது)

புத்தளம் – மாம்புரி, பனையடிச்சோலை எனும் இடத்தில் இரு குழுக்களுக்கிடையில் கத்திக் குத்து மோதல் இன்று (14) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இம்மோதலில் புத்தளம் உழுக்காப்பள்ளத்தை வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மது சதாம் என்பவர் கத்தி குத்துக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வேளையில் மரணித்துள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இம்மோதல் சம்பவத்தோடு தொடர்பானவர்கள் யார் யார் என்பது இதுவரை அறியப்படவில்லை.

இதில் மரணமானவரின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY