லிபியா கடற்கரைக்கு அருகே குடியேறிகள் சென்ற படகு விபத்து; 17 பேர் பலி

0
173

லிபியா கடற்கரைக்கு அப்பால், குடியேறிகள் சென்ற ரப்பர் படகு பிரச்சினைக்கு உள்ளானதால் குறைந்தது 17 குடியேறிகள் கடலில் மூழ்கிப் போயுள்ளதாக நம்பப்படுகிறது.

ரப்பர் படகு மூழ்கிக் கொண்டிருந்த போது விபத்து நடந்த பகுதிக்கு ஐரோப்பிய தொண்டு நிறுவன குழுக்கள் சார்பில் இயக்கப்படும் ஒரு மீட்பு கப்பல் விரைந்து வந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால், கடல் சீற்றமிகுந்து காணப்பட்டதால் பலர் காணாமல் போனார்கள்.

காணாமல் போனவர்களில் மூன்று வயது குழந்தை ஒன்றும் அடங்கும்.

LEAVE A REPLY