இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகன் ஆதில் ஜனாஸா லண்டனில் நல்லடக்கம்

0
684

தேசிய தகவல் நிலைய தலை­வரும் முன்னாள் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான இம்­தியாஸ் பாக்கீர் மாக்­காரின் புதல்­வ­ரான சட்­டத்­த­ரணி ஆதில் பாக்கீர் மாக்கார் (வயது 26) லண்­டனில் நேற்­று­முன்­தினம் புதன்­கி­ழமை கால­மானார். லண்டன் பொரு­ளா­தார கல்­லூ­ரியில் பொரு­ளியல், அர­சி­யல்­துறை பட்­டப்பின் படிப்பை மேற்­கொள்­வ­தற்­காக புல­மைப்­ப­ரிசில் பெற்று கல்­வியை தொடர்ந்­து­வந்­த­நி­லை­யி­லேயே கடு­மை­யான காய்ச்சல் ஏற்­பட்டு அவர் மர­ணித்­துள்ளார்.

லண்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் எல்.எல்.பி. பட்டம் பெற்று சட்­டத்­த­ர­ணி­யான ஆதில் பாக்­கீர்­மாக்கார் தேசிய இளைஞர் சேவை மன்­றத்தின் பணிப்­பாளர் சபை அங்­கத்­த­வ­ரா­கவும் சர்­வ­தேச விவ­கார பொறுப்­பா­ள­ராகவும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார் . 2015 ஆம் ஆண்டு ஐ.நா இளைஞர் மகா­நாட்டில் இலங்கை பிர­தி­நி­தி­யாக ஆதில் கலந்­து­கொ­ண்டு உரை­யாற்­றி­யி­ருந்தார்.

ஆதில் பாக்கீர் மாக்­கா­ரு­டைய ஜனாஸா நல்­ல­டக்க ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள அவ­ரது மூத்த சகோ­தரர் அஸாப் பாக்கீர் மாக்கார் புத­னன்று இரவு கட்­டா­ரி­லி­ருந்து லண்டன் பய­ண­மா­கி­யுள்ளார். இவ­ரது மரண விசா­ர­ணைகள் முடி­வ­டைந்த பின்னர் ஜனாஸா நல்­ல­டக்கம் லண்­ட­னிலேயே நடை­பெ­று­மென குடும்ப அங்­கத்­த­வர்கள் தெரி­வித்­தனர்.

இதே­நேரம் ஜனாஸா செய்தி கேள்­விப்­பட்­ட­தை­ய­டுத்து பெருந்­தொ­கை­யான மக்கள் மற்றும் அர­சியல் பிரமு­கர்கள், சமூகவியலாளர்கள் கொழும்பு- 07 புலஸ் லேனி­னுள்ள முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்­கரின் இல்­லத்­துக்­குச்­சென்று அனு­தாபம் தெரி­வித்து வரு­கின்­றனர்.

நேற்­றுக்­காலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இம்தியாஸ் பாக்கீர்மாக்காரின் இல்லத்துக்குச்சென்று அனுதாபம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY