ஒருநாள் கிரிக்கெட் குழாமிலிருந்து பொலார்ட், ராம்டின் நீக்கம்

0
136

ஸிம்­பாப்வே, இலங்கை ஆகிய நாடு­க­ளுடன் விளை­யா­டப்­படும் மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ருக்­கான மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் குழாமில் கீரொன் பொலார்ட், டினேஷ் ராம்டின் ஆகி­யோ­ருக்கு இடம் வழங்­கப்­ப­ட­வில்லை.அணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டமை தொடர்­பாக பொல்லார்ட், ராம்டின் ஆகி­யோ­ருக்கு தொலை­மடல் மூலம் மேற்­கிந்­தியத் தீவு­களின் தெரிவுக் குழுத் தலைவர் கெர்ட்னி ப்றவ்ண் அறி­வித்தார்.

இரு­வரும் நீக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணத்தை தன்­னிடம் அல்­லது தெரிவுக் குழு­விடம் கேட்­ட­றிந்­து­கொள்­ளலாம் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் நடை­பெற்ற பாகிஸ்­தா­னு­ட­னான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருவரும் பிரகாசிக்கத் தவறினர்.

LEAVE A REPLY