கால்நடைகளுக்கான இலவச நடமாடும் வைத்திய சேவை

0
181

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பீ.எஸ்.டி.ஜி திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கால்நடைகளுக்கான இலவச நடமாடும் வைத்திய சேவை 13-10-2016 நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.

மேற்படி கால்நடை வைத்திய நடமாடும் சேவையில் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.டுஜித்திரா லிங்கேஸ்வரன் , கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தரகள்;,கால்நடை அபிவிருத்தி காரியாலய உத்தியோகத்தர்கள் கால்நடை பண்ணையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கால்நடைகளுக்கு அம்மை நோய் வராமல் பாதுகாப்பதற்கான தடுப்பு ஊசி காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.டுஜித்திரா லிங்கேஸ்வரன் உள்ளிட்ட கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் கால்நடைகளுக்கு போடப்பட்டது.

இங்கு ஆடு,மாடு,கோழி உட்பட கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலவச வைத்திய ஆலோசனயும்,இலவச மருந்து விநியோகமும்,புதிய பண்ணையாளர் பதிவும், கால்நடைகளை பார்வையிட்டு மருந்து வகைகளை வழங்கல் என பல்வேறு சேவைகள் இடம்பெற்றன.

குறித்த நடமாடும் சேவையினூடாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கால்நடை பண்ணையாளர்கள் பலர் பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY