கட்டிட நிர்மானப்பணியாளர் மூன்று பேரை தாக்கிய குற்றச்சாட்டு: 17ம்திகதி வரை விளக்கமறியல்

0
153

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மொறவெவ பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டிட நிர்மானப்பணியாளர் மூன்று பேரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 09பேரையும் அணிவகுப்பிற்கு உற்படுத்தும் வரை 17ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் நேற்று (13) உத்தரவிட்டார்.

கடந்த 11ம்திகதி செவ்வாய்கிழமை இரவு மொறவெவ பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கலாச்சார மண்டபத்தின் கட்டிட நிர்மாணப்பணிகளை மேற் கொள்வதற்கு வருகை தந்திருந்த பணியாளரகளை தாக்கிய நிலையில் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்ட மொறவெவ பகுதியைச்சேர்ந்த ஒன்பது பேருக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தாக்குதலில் காயமடைந்த மூதுர் பிரதேசத்தைச்சேர்ந்த மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY