(Poem) ஜனாஸா நல்லடக்கம்

0
238

(Mohamed Nizous)

கஷ்டம் பல பட்டு
கடும் தொண்டு செய்வார் பலர்
இஷ்டத்துக்கு அத்தொண்டை
Insulting செய்வார் சிலர்.

நெருக்கடியில் சிக்கி
நிற்கத் தவிப்பார் பலர்
தெருக்களை மறைத்து
தினவெட்டாய் park செய்வார் பலர்.

மைய்யத்து வீட்டில்
கையை உயர்த்த்துகிறார்
மன்றாடும் துஆக்காக பலர்.
அன்றொய்டில் படமெடுக்க சிலர்.

கண்ணீர் கொட்டும்
கடுந்துயரம் வெளிப்படும்
தனி மனசுகளில் பலர்.
அனிமேஷன்களில் சிலர்.

கப்ரை சுற்றி நின்று
கைமண்ணை பலர் போட
அப்பொழுதும் அடுத்தவரின்
ஐபோணை நோக்குவார் சிலர்.

ஊர்வலம் செல்கையில்
உலகை வெறுப்பார் பலர்
யாருடைய மாடி இது
என ஆசை கொள்வார் சிலர்.

எல்லோரும் இறுதியில்
மெல்லக் கலைந்து செல்வார்
உள்ளது பல வேலை
உலகம் இவ்வளவே.

LEAVE A REPLY