யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் வயோதிபர் மரணம்

0
158

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை-குச்சவௌி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட திரியாய் பகுதியில் நேற்றிரவு (13) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திரியாய்- 05ம் வட்டாரத்தைச்சேர்ந்த காலியப்பன் செல்லப்பிள்ளை (65 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- திரியாய் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு அருகில் காட்டு யானை வந்த போது அதனை விறட்டிச்சென்ற வேளையிலேயே யானை தாக்கியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் தற்பொழுது தாக்கிய இடத்தில் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY