கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் சண்டை: ஜந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
242

(அப்துல்சலாம் யாசீம்-)

கிழக்கு பல்கலை கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ பீட 01ம் 02ம் வருட மாணவர்கள் குழுக்களுக்கிடையே நேற்று மாலை (13) ஏற்பட்ட வாய்த்தக்கம் மோதலாக மாறியதினால் ஜந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் தீப்தி நுவன் (21 வயது) எச்.எம்.டி.சன்னக ஹேமன்த (22 வயது) மற்றும் புருசோத்தம் (21 வயது) மற்றும் கிரிஷாந் (22 வயது) முகம்மட் ஹாரிஸ் கான் (21 வயது) ஆகியோரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- விடுதியை 01ம் வகுப்பு மாணவர்கள் கழுவிக்கொண்டிருக்கும் போது 02ம் வகுப்பு மாணவர்களின் அறைக்குள் தண்ணீர் சென்றமையினால் வாய்த்தக்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இம்மோதல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை நிலாவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY