ஷைஹுல் பலாஹ்வை கவனித்த மகனுக்கு கிடைத்த மகத்தான வெகுமதி..!

0
8829

(எம்.எஸ்.எம். சுஜா)

நம்மை விட்டு பிரிந்த மர்ஹூம் ஷெய்ஹுல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி) அவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிவிடை செய்தமைக்கு மதிப்பளித்து கெளரவிக்கும் வகையில் வெல்லம்பிட்டியை சேர்ந்த அல்ஹாபிழ் மெளலவி நாசர் முஹம்மட் றிபாஸ் அவர்களுக்கு ஸ்ரீலங்கா ஹிறா பெளண்டேஷனினால் உம்றா பயணத்துக்கான ஆவணங்கள் இன்று (13) கையளிக்கப்பட்டது.

தனக்கு வழங்கப்படும் விடுமுறைகளைக்கூட பொருட்படுத்தாது மர்ஹூம் ஷெய்ஹுல் பலாஹ் அவர்களுக்கான சகல பணிவிடைகளையும் செய்து கவனித்தமைக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே இறையோனின் புனித இல்லமான கஃபாவை தரிசித்து உம்றா செய்வதற்கான பாக்கியம் ஹிறா பெளண்டேஷனால் ஹாபிழ் றிபாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்களை ஸ்ரீலங்கா ஹிறா பெளண்டேஷனின் தலைவரும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி), பொறியியலாளர் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

உம்றா கடமைக்காக இன்னும் சில தினங்களில் அல் ஹாபிழ் நாசர் முஹம்மட் றிபாஸ் மக்கா நகருக்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY