இன்றைய காலத்தில் நவீன தொழில் நுட்பம் பாவனை அதிகரித்ததன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறமை இன்று அரிதாகக் காணப்படுகின்றன -ஏ.ஏ.சலீம்

0
329

(எம்.எம்.ஜபீர்)

இன்றைய காலத்தில் நவீன தொழில் நுட்பம் குறிப்பாக தொலைபேசி பாவனை அதிகரித்ததன் காரணமாக பாடசாலை மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று தமது உலகக் கல்வி மற்றும் மேலதிக திமைகளை விருத்தி செய்வதில் அசிரத்தை காட்டி வருகின்றனர். இதனால் வாசிப்பு திறமை இன்று அரிதாகக் காணப்படுகின்றன என சம்மாந்துறை பிரதேச சபை செயலாளரும், விசேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீம் தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் 100 பாடசாலை மாணவர்களுக்கு இலவச அங்கத்துவம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காகவே அரசாங்கம் ஒக்டோபர் மாதத்தினை வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் வாசிப்பு என்பது மங்கிப் போனதொன்றாக காணப்படுகின்றது. இந்த வருடத்தின் தொனிப்பொருள் கூட வாசிப்பு உலக அறிவுக்கான நூழைவாயில் என்ற தலைப்பிலேயே தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையும் கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுக்கின்றது.

வாசிப்பில் நேசம் அல்லாதவர்களாகவே இன்று பெரும்பாலானவர்கள்; காணப்படுகின்றனர். குறிப்பாக மாணவர்கள் இந்த விடயத்தில் பொடுபோக்காக காணப்படுவது வேதனையளிக்கின்றது. அதைவிட பெரியோர்கள் வாசிப்பு நமது வாழ்வில் சுவாசமாக இருக்க வேண்டும் என கூறுகின்றார்கள் மனிதனுக்கு உயிர் இருக்கும் வரைக்கும் வாசிப்பு இருக்க வேண்டும் ஏன் என்றால் இன்று உலகத்தில் நடைபெறும் செயற்பாடுகளை அறிந்து கொள்ள வாசிப்பு மிக முக்கிய சாதனமாக காணப்படுகின்றது.

அறிவுரை சார்ந்த, கல்வியாளர்கள் சார்ந்த, பாடம் சர்ந்த, வாழ்கைக்கு தேவையான, எதிர்காலத்திற்கு தேவையான புத்தங்களை வாசிக்கக் கூடியவர்களாக நாம் அனைவரும் மாற வேண்டும் தொலைபேசிகள் பாவிக்கத்தான் வேண்டும் ஏனென்றால் நவீன யுகத்திற்கு ஏற்றால்; போல் நாம் எம்மை தயார் செய்யத் தான் வேண்டும் அது எப்படி என்றால் அதனூடாக அறிவு சார்ந்த தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளுபவராக மாற வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி திணைக்கள உதவியாளர் எஸ்.கருணாகரன், அம்பாரை பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர், அலுவலக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஏ.யோகானந்தன், சம்மாந்துறை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.இஸ்ஹாக், அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, ஏ.எல்.எம்.முஸ்தாக், வீ.சீ நூலகத்தின் நூலகர் ரீ.கோபாலசிங்கம், அமீர் அலி நூலகத்தின் உத்தியோகத்தர்கள், வாசகர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY