தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் காலமானார்

0
171

தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் இன்று காலமானார். 70 வருடங்களாக தாய்லாந்தின் மன்னராகவிருந்த பூமிபோல், தனது 88 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் மிக நீண்ட காலமாக ஆட்சி செய்த மன்னராக பூமிபோல் திகழ்கின்றார்.

சில தினங்களாக அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்ததாக தாய்லாந்து அரண்மனையின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY