சுரேஷ் ரெய்னாவுக்கு வைரஸ் காய்ச்சல்: ஒருநாள் போட்டியிலிருந்து விலகல்

0
160

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியுசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இதனால் ஒருநாள் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 16-ம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் அணியில் இடம்பிடித்த இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, வைரஸ் காய்ச்சல் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

ரெய்னா விளையாடவில்லை என்றாலும் அவருக்குப்பதிலாக வேறு எந்த வீரரையும் எடுக்கவில்லை என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் காய்ச்சல் காரணமாக ரெய்னாவும் விளையாட முடியாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY