மரத்தில் ஏறி செல்பி எடுத்த என்ஜினீயர் ஆற்றுக்குள் விழுந்து பலி

0
159

இந்தியாவில் ஒடிசாவில் மரங்களில் ஏறி நின்று செல்பி எடுத்த மென்பொறியியலாளர் ஒருவர் தவறி ஆற்றுக்குள் விழுந்து பலியாகியுள்ளார். அவரது பெயர் ஆர். பட்நாயக் (வயது 25).

ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் பர்லகேமுண்டி நகரில் காமக்யா நகர் பகுதியில் வசித்து வந்த பட்நாயக், நேற்று மாலை மகேந்திராதனயா ஆற்று பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் கற்பாறைகளில் ஏறி செல்பி எடுத்து உள்ளார். இதில் அவர் தவறி ஆற்றுக்குள் விழுந்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், சம்பவ இடத்திலிருந்து 100 மீட்டர்கள் தொலைவில் அவரது உடல் கிடைத்தது. இதுபற்றி போலீசார் வழக்கு ஒன்று பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY