பெர்முடாவை தாக்க வருகிறது அதிபயங்கரமான நிகோல் புயல்

0
172

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக கடந்த வாரம் அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது.

அமெரிக்காவில் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால், பலத்த மழை கொட்டியது. ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த புயலின் தாக்கத்தினால் ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழந்தனர். ஹதியில் மட்டும் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம் அடங்குவதற்குள் பெர்முடா நாட்டை அதிபயங்கரமான நிகோல் புயல் தாக்க உள்ளதாக அந்நாட்டின் தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

பெர்முடாவின் தெற்கு-தென்மேற்கு பகுதியில் இருந்து சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிகோல் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தேசிய சூறாவளி மையம் கணித்துள்ளது.

இந்த நிகோல் புயல் பெர்முடா அருகே இன்று கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெர்முடா நாடானது வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு ஆகும்.

LEAVE A REPLY