அப்துல்லாஹ் றஹ்மானி அவர்களின் மறைவு தொடர்பில் SLMC தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தி

0
217

“பன்னெடுங்காலமாக தனது உற்றார் உறவினர், திருமணம் செய்த மனைவி போன்றோரைப் பிரிந்து அல்லாஹ்வின் பாதைக்காய் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மிகச்சிறந்த மனிதராக அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் வாழ்ந்தார்கள். தனது வாழ்நாளில் மிகக்கூடுதலான காலங்களை காத்தான்குடியில் கழித்து பல நூற்றுக்கணக்கான உலமாக்களையும், ஹாபிழ்களையும் உருவாக்கி நாட்டின் நாலா பக்கத்திலும் தஹ்வா பணிகள் சிறப்புற அத்திவாரமாய் அமைந்தார்கள்.

கடந்த உள்நாட்டு யுத்த காலங்களில் மற்றும் மார்க்க ரீதியான நெருக்கடிகள் தோன்றிய போதெல்லாம் மிக சிறப்பான தலைமைத்துவத்தை காத்தான்குடி மக்களுக்கு வழங்கி சிறப்பாக செயற்பட்டதை இவ்விடத்தில் நினைவு கூறுவது பொருத்தமானதாகும்.

 அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தை வழங்க பிரார்த்திப்பதோடு அன்னாரைப் பிரிந்து துயருரும் அவருடைய குடும்பத்தவர்கள், உற்றார் உறவினர்கள், அவர்களின் அன்பு மாணவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் சாந்தியளிப்பானாக ! ஆமீன் யாரப்பல் ஆலமீன்” என முபீன் அவர்கள் தன்னுடைய அனுதாபச்செய்தியில் தெரிவிதுள்ளர்கள்.

LEAVE A REPLY