வரட்சி காரணமாக புல்மோட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு

0
103

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை புல்மோட்டை பகுதியில் கடும் வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இலாஹியா நகர் அரபாத் நகர் ஜின்னா புரம் தக்வா நகர் போன்ற பிரதேசங்களில் தண்ணீர் வவுசர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கொண்டு வருவதனால் அது போதாமை காரணமாக இப் பிரச்சினை ஏற்படுவதாகவும் 4500 க்கு மேற்பட்ட குடும்பங்கள்இதன் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

பதவி சிரி புர பகுதியில் இருந்து வரும் முகவர்களிடம் பணம் கொடுத்து குடிநீர் பெற வேண்டியுள்ளதாகவும் இதனால் தாங்கள் பெரும் அசெளகரியங்களை எதிர் நோக்குவதாக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர் . எனவே குடிநீர் பெறுவதற்கான வழி வகைகளை ஏற்படுத்தித் தருமாறும் உரிய தரப்பினரை மக்கள் வேண்டி நிற்கின்றனர்.

LEAVE A REPLY