உளவியல் நோயாளிகளால் நிரம்பி வழிகின்ற சோஷியல் மீடியாக்கள்.

0
601

கையில்லாத பெனியனை போட்டு தலையோடு தோள்தெரிகிற போட்டோவை கொண்ட
அவனது வாட்சப் ப்ரொபைல் ஸ்டேட்டஸ் கூறியது ‘அட் த ஜிம்’ (At the gym )

ஆனால் எனக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு மெக் டொனால்டின் பிக் மெக் பேகரை கடித்துக்குதறிக்கொண்டு இடைக்கிடையே இரு லீட்டர் கொக்கா கோலா போத்தலில் இருந்து அருந்திக்கொண்டிருந்தான் அந்த சோமாலியா நண்பன் .

“புரோபைல் இப்படி சொல்லுகிறதே … நீ இங்கே கோழியை பல்லால் வேட்டையாடிக்கொண்டு இருக்கிறாயே ” என்று கேட்டேன் அவனிடம் ..

“சும்மா ஒரு கலக்கலா இருக்குமே .பார்க்கிரவங்க கொஞ்சம் பரவசமா நினைப்பாங்க அதுதான். .”வறட்டு சிரிப்பை கொட்டியனாக மிகவும் பருத்த அவனது உடலை கடினப்பட்டு தூக்கிக்கொண்டு தண்ணீர் அருந்த நகர்ந்து போனான் .

உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு செல்லுமாறு பல தடவை அவனுக்கு பலர் கூறிய போதும் வெட்கம் ,நேரமின்மை காரணமாக தவிர்த்து வருவதாக பல தடவை புலம்பி இருக்கிறான் .

சோசல் மீடியாக்கள் இப்போது பெருமை பாடுகிற இடமாகிப்போய் விட்டது . தம்மிடம் என்ன இருக்கின்றது என்பதை காட்டுவதை விட, இருப்பதை காட்டி பார்ப்பவனை வயிற்று எரிச்சலை வாரிக்கொட்டுவதற்காகவே பலர் பதிவு செய்கிற நிலைக்கு போய் விட்டது .

வீட்டில் உண்பது என்ன தொடக்கம் உடுத்தப்பட்ட உடை தொடங்கி பயணம் செய்தபோது கழிப்பிடத்துக்காக நிறுத்தப்பட்டுள்ள இடம் வரை புகைப்படங்களாலும் ஸ்டேட்டஸ் களாலும் நாறிக்கொண்டு இருக்கின்றது சோஷல் மீடியாக்கள் .

தானும் சமுக நீரோட்டத்தில் சமமாக, உயர்ந்தவனாக , சிறந்தவனாக உள்ளேன் என்பதை சமூகத்துக்கு காட்டும் தாழ்வு மனப்பாண்மை கொண்ட ஒரு வகை உளவியல் நோயே இதற்கு காரணம் என உளவியல் ஆராய்ச்சிகள் கூறுவது ஓரு புறம் இருக்க இது போன்ற பிண்ணனியில் இருப்பதில் முதல் காரணம் பெருமை அடித்தல் என்பது யாரும் அறிந்ததே .

நமக்கு தகுதி இல்லாத ஒன்றை வைத்து எப்படி நாம் பெருமைப்பட முடியும் ..?

பெருமைக்கும் புகழுக்கும் உரியவன் அளவற்ற அருளாளன் நிகற்றற்ற அன்புடையோன் அல்லாஹ்வே ..

நோக்கங்களை அல்லாஹ்வுக்காக என எண்ணி பதிவுகள் இடுகின்ற போது,கீ போர்டுகளை தட்டுகிற போது பல பாவங்கள் தவிர்க்கப்படலாம், ஒவ்வொரு பதிவுக்கும் பல நன்மைகள் கிடைக்கப்பெறலாம்..

LEAVE A REPLY