மட்டு. மாவட்டத்தில் போக்குவரத்துப் பொலிஸாருக்கு எதிராக பெண்கள் அதிகளவில் முறைப்பாடுகள்; நடவடிக்கை எடுக்குமாறு டி.ஐ.ஜீக்கு நீதிவான் எம்.கணேசராஜா உத்தரவு

0
352

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் உள்ள போக்­கு­வ­ரத்து பொலி­ஸா­ருக்கு எதி­ரான அதி­க­மான முறைப்­பா­டுகள் பெண்­க­ளி­ட­மி­ருந்து மட்­டக்­க­ளப்பு மாவட்ட நீதிவான் நீதி­மன்­றுக்கு கிடைத்­தி­ருப்­பதால் போக்­கு­வ­ரத்து பொலி­ஸாரின் நட­வ­டிக்கை குறித்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதிவான் எம்.கணே­ச­ராஜா உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள பல பகு­தி­களில் போக்­கு­வ­ரத்து பொலிஸார் வீதி­களில் கட­மை­யி­லி­ருக்கும்போது மோட்டார் சைக்­கிள்­களில் போக்­கு­வ­ரத்து செய்யும் இளம் பெண்­களை நிறுத்தி அவர்­க­ளி­ட­மி­ருந்து பல்­வேறு போக்­கு­வ­ரத்து சட்­டங்­களை கூறி பல மணி நேரம் வீதி­களில் நிறுத்தி பேசு­வது, அவர்­க­ளி­ட­மி­ருந்து தொலை­பேசி இலக்­கங்­களை பெறு­வது, தகா­த­மு­றையில் பேசு­வது போன்ற விட­யங்கள் பற்றி பல்­வே­று­பட்ட முறைப்­பா­டுகள் மாவட்ட நீதி­மன்­றுக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன.

எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான செயற்­பா­டு­களை உடன் நிறுத்தும் முக­மாக பொலிஸ் நிலை­யங்­களின் பொறுப்­ப­தி­கா­ரி­களை அழைத்து குறித்த விடயம் தொடர்­பாக உரிய கவனம் செலுத்­து­மாறும் குறித்த போக்­கு­வ­ரத்து பொலி­ஸாரின் இவ்­வா­றான நடத்­தை­க­ளுக்கு மிக விரை­வாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் நீதிவான் மா.கணே­ச­ராஜா கட்­டளை பிறப்­பித்­துள்ளார்.

போக்­கு­வ­ரத்து பொலி­ஸாரின் இவ்­வா­றான செயற்­பா­டுகள் குறித்து மாவட்­டத்தின் பிரதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு எழுத்து மூல­மாக தெரி­யப்­ப­டுத்­தி­ய­துடன், மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளையும் அழைத்து குறித்த விடயம் தொடர்பாக ஆராயும் வண்ணம் அதற்கான கட்டளையும் நீதிவானால் பிறப்பிக்கப்பட்டது.

Source: MetroNews

LEAVE A REPLY