புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ரீட்டா ஐசாக்கிடம் ஜம்இய்யத்துல் உலமாசபை கோரிக்கை

0
433

“புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பு, பிர­தி­நி­தித்­துவம், மத, கலா­சார உரி­மைகள் தெளி­வாகக் குறிப்­பி­டப்­ப­ட­வேண்டும்.

அதில் தெளி­வற்ற தன்­மைகள் இருக்­கக்­கூ­டாது. இவ்­வி­வ­கா­ரத்தில் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பங்­க­ளிப்பை நாம் வேண்டி நிற்­கிறோம்” என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை, சிறு­பான்மை இனங்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யா­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

நேற்று முன்­தினம் மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யா­வுக்கும் சர்­வ­மத தலை­வர்­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போது அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி இவ்­வாறு கோரிக்கை விடுத்தார்.

இலங்­கையில் முஸ்­லிம்­களின் நிலைமை மற்றும் தேசிய ஒற்­று­மைக்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான பங்­க­ளிப்பு, சர்­வ­மத தலை­வர்கள் மேற்­கொள்ளும் தேசிய ஒற்­று­மைக்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான முன்­னெ­டுப்­புக்கள் தொடர்பில் உல­மா­ச­பையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஐக்­கிய நாடுகள் அமைப்பின் நிபுணர் ரீட்டா ஐசாக் நதே­யா­விடம் விளக்­க­ம­ளித்தார்.

அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில் தெரி­வித்த­தா­வது,

பழை­ய­வை­க­ளையும் நடந்து முடிந்த சம்­ப­வங்­க­ளையும் பற்றி நாங்கள் பேச விரும்­ப­வில்லை. பழைய சம்­ப­வங்­களை மறப்போம். மன்­னித்­து­வி­டுவோம். நாம் எமது எதிர்­கா­லத்தில் நம்­பிக்கை வைத்­துள்ளோம். எமது பாது­காப்­புக்கும் உரி­மை­க­ளுக்­கு­மான நல்ல நகர்­வுகள் எமக்குத் தேவை.

முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தி முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­திகள் உங்­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­றார்கள்.

அறிக்­கை­களைக் கைய­ளித்­தி­ருக்­கி­றார்கள். இந்தப் பிரச்­சி­னை­களின் தீர்­வுக்­காக தாங்கள் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள சர்­வ­மத தலை­வர்­களின் அமைப்பு இனங்­க­ளுக்கும் மதங்­க­ளுக்­கு­மி­டையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் நாட்டு மக்­களின் சக வாழ்­வினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கும் பொதுப் பிர­க­டனம் மூலம் முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொண்­டு­வ­ரு­கி­றது.

நாட்டின் எந்தப் பாகத்தில் இனங்­க­ளுக்­கி­டையில் சிறி­யதொரு பிரச்­சினை ஏற்­பட்­டாலும் அதனை உட­ன­டி­யாக மாவட்ட கிளைகள் மூலம் தீர்ப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

பிரச்­சி­னைகள் உரு­வாகும் போது அவற்றை எவ்­வாறு அணு­கு­வது என்­பது தொடர்பில் மதத்­த­லை­வர்­க­ளுக்கு விழிப்­பூட்­டப்­ப­ட­வுள்­ளது. இதற்கு அர­சாங்கம் பூரண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.

ஒவ்­வொரு மதத்தின் கோட்­பா­டு­க­ளையும் அதன் வரை­வி­லக்­க­ணத்­தையும் அந்­தந்த மதத்­தி­னரே முன்­வைக்க வேண்டும். மாறாக ஒரு மதத்தின் கோட்­பா­டு­க­ளையும் வரை­வி­லக்­க­ணத்­தையும் வேற்று மதத்­த­வர்கள் முன்­வைக்கக் கூடாது.

இத­னா­லேயே இன­மு­று­கல்கள் உரு­வா­கின்­றன. இவ்­வி­டயம் மதங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

ஐக்­கிய நாடுகள் சபை 1992 ஆம் ஆண்டு நிறை­வேற்­றிய பிர­க­டனம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இந்தப் பிர­க­ட­னத்தை அமுல்­ப­டுத்தி மனித உரி­மைகள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

முஸ்­லிம்கள் இந்­நாட்டில் ஏனைய இனத்­த­வ­ருடன் நல்­லி­ணக்­கத்­து­டனும் நல்­லு­ற­வு­டனும் வாழ்­கி­றார்கள். எங்­க­ளுக்குள் புரிந்­து­ணர்வு இருக்­கி­றது. என்­றாலும் முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் சபை ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும் என்று வேண்­டிக்­கொண்டார்.

நாட்டில் நல்­லி­ணக்­கத்தை வளர்ப்­ப­தற்கும் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்­து­வ­தற்கும் தனி­யான அமைச்­சொன்று நிறு­வப்­பட்­டுள்­ளது. அந்த அமைச்சு தனது பணி­களைத் திறம்­பட முன்­னெ­டுப்­ப­தற்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் தெரி­வித்தார்.
பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர்

பெல்­லன்­வில விம­ல­ரத்­ன­தேரர் பேச்­சு­வார்த்­தையில் கருத்து தெரி­விக்­கையில்,

இலங்­கையில் பல்­லின மக்கள் ஒற்­று­மை­யாக இருக்­கிறோம். முன்­மா­தி­ரி­யாக வாழ்­கிறோம். நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் சிறு­பி­ரச்­சி­னைகள் உரு­வா­னாலும் அவை உட­னுக்­குடன் தீர்க்­கப்­ப­டு­கின்­றன.

இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை வளர்ப்­ப­தற்கும் சக­வாழ்­வினை உறுதி செய்­வ­தற்கும் ஜனா­தி­ப­தியும் அர­சாங்­கமும் மும்­மு­ர­மாக செயற்­பட்­டு­வ­ரு­கின்றார்.

இந்நாட்டில் மத ரீதியான ஒற்றுமையை வளர்ப்பதுடன் மனிதாபிமானத்தை வளர்க்கவும் நாட்டின் அபிவிருத்திக்கும் ஐ.நாடுகள் சபை உதவிபுரிய வேண்டும் என்றார்.

ஐ.நா.நிபுணர் ரீட்டா ஐசாக் நதேயாவுடனான கலந்துரையாடலில் முஸ்லிம் தரப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத்தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தியுடன் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ, முபாரக், பிரதித்தலைவர் அஷ்ஷெய்க் அகார் மொஹமட், தேசிய சூரா சபையின் உபதலைவர் எஸ்.எச்.எம்.பளீல், மௌலவி ஹஸ்புல்லாஹ் ஆகியோரும் பங்கு கொண்டனர்.

Source: Vidivelli

LEAVE A REPLY