கிழக்கு மாகாணத்திலேயே நியமனம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி: முதலமைச்சர்

0
184

Naseer Hafisவெளி மாகாணங்களுக்கு நியமனம்பெற்றுள்ள இம் முறை கல்வியியற் கல்லூரிகளில் கற்கையை பூர்த்திசெய்த கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசிரியர்களுக்கும் தமது மாகாணத்திலேயே நியமனம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

வெ ளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என்ற அறிவித்திருந்த நிலையிலேயே முதலமைச்சர் இதனை அறிவித்துள்ளார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமரை சந்தித்த முதலமைச்சர் ஆசிரியர்கள் தொடர்பான சகல ஆவணங்களையும் அவரிடம் கையளித்து அவர்களின் பிரச்சினைதொடர்பில் தெளிவுபடுத்தினார்

இதனையடுத்து முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க உரிய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைளையடுத்து கிழக்கு மாகாண கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு அவர்களின் மாகாணத்திலேயே நியமனம் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது

கடந்த வியாழக்கிழமை கிழக்கு மாகாண சபை கட்டத்தொகுதியில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதமைச்சரிடம் மகஜர் கையளித்போது குறித்த ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அவர்களுக்கான நியமனங்கள்சொந்த மாகாணத்திலேயே வழங்கப்படவுள்ளன

எனவே அடுத்த வாரமளவில் அவர்களுக்கான நியமனங்களை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்மை குறிப்பிடத்தக்கது

இதனடிப்படையில் வெளி மாகாணங்களில் நியமனம்பெற்ற 407 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களும் தமதுசொந்த மாகாணங்களலேயே நியமிக்கப்படவுள்ளனர்

கிழக்கு மாகாண முதலமைச்சரின்
ஊடகப் பிரிவு

LEAVE A REPLY