வேனை நிறுத்தாமல் சென்றோர் மீது பொலீஸ் துப்பாக்கி பிரயோகம்; திருமலையில் சம்பவம்

0
180

gun-shooting(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நீதிமன்ற வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் நேற்றிரவு (12) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 01 மணியளவில் வௌ்ளை நிர வேனுக்குள் (EP PF-0100) கத்துவதை அவதானித்த பொலிஸார் வேனை நிறுத்தியுள்ளனர்.

அவ்வேளை வேணின் சாரதி நிறுத்தாமல் செல்ல முற்பட்டபோது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அத்துப்பாக்கி பிரயோகத்தில் காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு பகுதியைச்சேர்ந்த திலீப் குமார் (25 வயது) மற்றும் திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியைச்சேர்ந்த துறைநாயகம் சுதர்ஷன் (34 வயது) ஆகிய இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேனையும் அதில் பயணித்த மற்றுமொருவரையும் துறைமுக பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY