ஒருவர் அளவுக்கு அதிகமாக தூங்கினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

0
310

ஒருவரது ஆரோக்கியமான உடல்நலத்திற்கு தரமான தூக்கம் மிகவும் இன்றியமையாதது. எவ்வளவு தான் தூக்கம் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அளவுக்கு அதிகமானால், அதனால் எதிர்விளைவுகளைத் தான் சந்திக்கக்கூடும்.

அதிலும் ஒரு நாளைக்கு 10 மணிநேரத்திற்கு மேல் ஒருவர் தூங்கினால், அதனால் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்படும். இங்கு அளவுக்கு அதிகமாக ஒருவர் தூங்கினால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதய நோய்கள்

அமெரிக்க ஆய்வு ஒன்றில் இதய நோய்க்கும், அதிகப்படியான தூக்கத்திற்கும் சம்பந்தம் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் 9-11 மணிநேரம் வரை தூங்குபவர்களுக்கு 38 சதவீதம் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதும் தெரிய வந்தது.

உடல் பருமன்

அளவுக்கு அதிகமாக தூங்குபவர்கள், உடற்பயிற்சியை அளவாக செய்வார்கள். இப்படி இருந்தால், உடல் பருமனால் அவஸ்தைப்பட நேரிடும். எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர் தன் உடலுக்கு வேலை கொடுக்கிறார்களோ, அவர்களது உடலில் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் பருமனடைவது தடுக்கப்படும்.

முதுகு வலி

எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமாக தூங்குகிறார்களோ, அவர்கள் முதுகு பகுதிக்கு அதிகமான அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். இப்படி அழுத்தம் அதிகம் கொடுக்கும் போது, நாள்பட்ட முதுகு வலியால் அவஸ்தைப்படக்கூடும்.

சர்க்கரை நோய்

அதிகமான தூக்கம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆய்வு ஒன்றில் ஒருவர் 9 மணிநேரத்திற்கு மேல் தூங்கினால், சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் 6-7 மணிநேரம் தூங்குபவர்களை விட அதிகம் இருப்பது தெரிய வந்தது.

மன இறுக்கம்

அளவுக்கு அதிகமான தூக்கம் மன இறுக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே அதிகம் தூங்கி, மன இறுக்கத்தால் அவஸ்தைப்படாதீர்கள்.

LEAVE A REPLY