சாய்ந்தமருது சிராஸ் மீராசாஹிப்புக்கு Lanka Ashok Layland தலைவர் பதவி

0
270

மிக நீண்ட காலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை விட்டு தூரமாக இருந்த சிராஸ் மீராசாஹிப்புக்கு Lanka Ashok Layland தலைவர் பதவி ஒன்று வழங்குவதற்காக சாய்ந்தமருது மத்திய குழுவை கொழும்புக்கு வரவழைத்த கட்சியின் தேசியத் தலைமை, நேற்று இரவு இடம் பெற்ற மிக நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர், சாய்ந்தமருது மத்திய குழுவினதும், கட்சியின் பிரதித் தலைவர் ஜெமீலினதும் அனுசரணையுடன் Lanka Ashok Layland தலைவர் பதவி வழங்கப்பட்டது.

மேலும் சாய்ந்தமருது மத்திய குழு தலைவராக அன்வர் ஹாஜியார் அவர்களும், சாய்ந்தமருதின் அமைப்பாளராகவும், சாய்ந்தமருதின் அரசியல் அதிகாரமும் கட்சியின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவருமாகிய ஏ.எம். ஜெமிலிடமும் வழங்குவதாக ஏகமானதாக கட்சியின் தலைவர் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது.

இது வரைகாலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு அரசியல் தலைமையாலும் இப்படியான நான்கு நிறுவனங்களின் தலைவர் பதவியும், அதுமட்டுமல்லாது சாய்ந்தமருதுக்காக இரண்டு நிறுவனங்களுக்கான தலைவர் பதவியும் வழங்கப்பட்டதானது கடந்த அரசியல் வரலாற்றின் ஒரு திருப்புமுனையாகும் இவ்விடயமானது தேசியத் தலைமை அமைச்சர் ரிஷாட்டை தவிர வேறு யாராலும் முடியாத ஒன்றாகும் என்று சாய்ந்தமருது மத்திய குழுவினர் தேசியத் தலைமைக்கு நன்றி தெரிவித்தார்கள்.

LEAVE A REPLY