இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் மகன் லண்டனில் வபாத்! இன்னாலில்லாஹ் …

0
792

தேசிய ஊடக நிலையத்தின் தலைவரும், முன்னாள் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் நான்காவது மகன் ஆதில் பாக்கிர் மாக்கார் (வயது 26) இன்று லண்டனில் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

சட்டத்துறையில் உயர் கல்விக்காக கடந்த மாதம் பிரித்தானியா சென்றிருந்த அவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டே வபாத்தாகியுள்ளார்.

அன்னாரின் ஜனாஸாவை இலங்கைக்கு எடுத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அன்னாரின் இழப்பால் துயருறும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை வழங்க பிரார்த்திப்போம்.

LEAVE A REPLY