நாளை காத்தான்குடியில் கடைகளை மூடவும்: சம்மேளனம் மற்றும் வர்த்தக சங்கம் வேண்டுகோள்

0
327

இன்று (12) மாலை வபாத்தான அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (13) இடம்பெறவிருப்பதால் காத்தான்குடியிலுள்ள பொது சந்தை மற்றும் ஹோட்டல்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடி ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொள்ளுமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி வர்த்தக சங்கம் என்பன இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த அறிக்கை.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி வர்த்தக சங்கமும் இணைந்து விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அன்புடையீர்,
السلام عليكم ورحمة الله وبركاته

தமிழ்நாடு அதிராம்பட்டிணத்தப் பிறப்பிடமாகவும், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும், இலங்கையில் பல நூறு உலமாக்களையும் ஹாபிழ்களையும் உருவாக்கியவரும், மூத்த உலமாவும், கொழும்பு சம்மாங்கோடு ஜாமிஉல் அழ்பர் ஜும்ஆ பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளருமான சங்கைக்குரிய மௌலானா மௌலவி எம்.ஏ. அப்துல்லாஹ் (றஹ்மாணி) பெரிய ஹஸ்ரத் அவர்கள் இன்று வபாத்தானார்கள். ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’

அந்நாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் நாளை (13.10.2016) அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளதால், வர்த்தகர்கள் அனைவரும் தங்களது உணவுச்சாலைகள் (ஹோட்டல்கள்) மற்றும் பொதுச் சந்தை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடி ஜனாஸா தொழுகை மற்றம் நல்லடக்க நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும், அந்நாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்குமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

جزاك الله خيرا

தலைவர் அல்ஹாஜ். AMM. தௌபீக் Eng.,
செயலாளர் அஷ்ஷெய்க். ALM. சபீல் (நளீமி) BA
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்.

தலைவர் அல்ஹாஜ். AGM. அஜ்வத்,
செயலாளர்  அல்ஹாஜ். MMA. சித்தீக்
காத்தான்குடி வர்த்தக சங்கம்

kky-fed-varthaha

LEAVE A REPLY