2024 ஒலிம்பிக் தொடரை நடத்தும் போட்டியில் இருந்து விலகியது இத்தாலி

0
151

2016-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் தொடர் 2020-ம் ஆண்டு ஜப்பானில் நடத்தப்படுகிறது.

அதன்பின் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரை நடத்தும் போட்டியில் ரோம் (இத்தாலி), பாரிஸ் (பிரான்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) மற்றும் புடாபெஸ்ட் (ஹங்கேரி) ஆகிய நகரங்கள் இடையே கடும் போட்டி இருந்தது.

இந்நிலையில், ரோம் மாநகர மேயர் விர்ஜினியா ராக்கி, இத்தாலி ஒலிம்பிக் கமிட்டியின் முடிவை ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்தார். குப்பை அகற்றம் மற்றும் ஊழல் ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, மூன்றில் இரண்டு பங்கு கவுன்சிலர்கள், மேயருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் இருந்து விலகுவதாக இத்தாலி ஒலிம்பிக் கமிட்டி முறைப்படி அறிவித்துள்ளது. ரோம் மாநகர நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் போட்டியை நடத்த இயலாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜியோவன்னி மலாகோ தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் புடாபெஸ்ட் ஆகிய நகரங்கள் மட்டுமே உள்ளன.

LEAVE A REPLY