(Poem) பிக்ஹுல் பேஷ்புக்

0
96

(Mohamed Nizous)

ஸதகாவுடைய பாடம்
———————–

நிய்யத்து வைத்தல்.
——————–
கூடுதலான லைக் பெற நிய்யத்து வைக்கிறேன் என மனதால் நிய்யத்து வைக்க வேண்டும்.

ஷர்த்துக்கள்
————
1.கொடுப்பவருக்கு பேஷ் புக்கில் சொந்த ஐடி இருக்க வேண்டும்

2.பெறுபவருக்கு ஐடி இருத்தல் மக்ரூஹ். பேக் ஐடி இருத்தல் முபாஹ் ஆகும்.

பொருட்கள்
———–

NGO வால் கிடைக்கப் பெற்ற பொருட்கள் ஏற்றமானது.

அரசாங்கத்தின் பொருட்கள் அதற்கடுத்து ஏற்றமானது.

சொந்தப் பொருள் கொடுத்தல் பற்றி fb அறிஞர்களிடத்தில் கருத்து வேற்றுமை உண்டு.

இடம்.
——

வெளிச்சம் உள்ள இடத்தில் கொடுக்கப் பட வேண்டும்.

Flash லைட்கள் பாவிப்பது சிறந்தது என்பதே உறுதியான சொல்லாகும்

கொடுத்தல்.
————-
கொடுப்பவர் , வாங்குபவர், கமரா மேன் ஆகிய மூவராவது கொடுக்கும் இடத்தில் இருப்பது கட்டாயமாகும்.

DSLR கமரா பாவிப்பது ஏற்றம் கூடியது.

சாதாரண கமரா பாவிக்கவும் அனுமதி உண்டு.

முக்கிய விடயங்கள்.

1. கொடுத்த படத்தை பதிவேற்றும் போது tag பண்ணல் மிகவும் வலியுறுத்தப் பட்ட வழிமுறையாகும்

2 . மீடியாக்களில் பிரசுரிக்க முடியுமானால் அவ்வாறு பிரசுரிப்பது கடமையாகும்.

தொப்பி சிலருக்கே பொருத்தமாகும் என்பதும் பொருத்தமானவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்பதும் ஏகோபித்த முடிவாகும்.

LEAVE A REPLY