சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் நூலக நூல்பட்டியல் கணனி தரவுத் தளம் ஆரம்ப நிகழ்வு

0
216

(எம்.எம்.ஜபீர்)

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் நூலக நூல்பட்டியல் கணனி தரவுத் தளம் உத்தியோக பூர்வமாக ஆராம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று நூலக வசிப்பு பிரிவில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாரும் விசேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீம் தலைமையில் ஆராம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி திணைக்கள உதவியாலாளர் எஸ்.கருணகரன், அம்பாரை பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழிநூட்ப உத்தியோகத்தர் ஏ.யோகநந்தன், சம்மாந்துறை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.இஸ்ஹாக், அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, ஏ.எல்.எம்.முஸ்தாக், வீ.சீ நூலகத்தின் நூலகர் ரீ.கோபால சிங்கம், அமீர் அலி நூலகத்தின் உத்தியோகத்தர்கள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அமீர் அலி பொது நூலகத்திலுள்ள நூல்களை வாசகர்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் நூலக நூல்பட்டியல் கணனி தரவுத் தளம் ஆராம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY