கைது செய்யப்பட்டவருக்கு 5000/= ரூபாய் தண்டம்

0
333

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் 750 மில்லி லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டவருக்கு 5000/= ரூபாய் தண்டம் செலுத்துமாறு நேற்று (11) திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ உத்தரவிட்டார்.

இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டவர் நாமல்வத்தை, 07ம் வாய்க்கால் பகுதியைச்சேர்ந்த கே.பி.பேமரத்ன பீரிஸ் (45வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்று வருவதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பல நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் திருட்டு தனமாக விற்பனை செய்து கொண்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY