போதை வஸ்து, வீட்டு வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் விழிப்புணர்வு நிகழ்வு

0
98

capture(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

போதை வஸ்து, வீட்டு வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் என்ற கருப்பொருளை மையப்படுத்திய விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (11) செவ்வாய்க்கிழமை மாலை ஏறாவூர் அல் அஷ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பெண் பிள்ளைகள், சிறுவர்கள் மற்றும் கலைக் குழுவினரால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

உலக பெண்பிள்ளைகள் தினத்தையொட்டி இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் அதிதியாகக் கலந்து கொண்டார்.

dsc02986

LEAVE A REPLY