மியான்மர் நாட்டில் பயங்கர மோதல்: 12 பேர் உயிரிழப்பு

0
517

மியான்மர் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ராகினில் ராணுவ வீரர்களுக்கும், துப்பாக்கி ஏந்திய வன்முறையாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மாங்டாவ் நகரத்தில் உள்ள பியாங்பிட் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் துப்பாக்கிகள் மற்றும் வாள்களை ஏந்தியவாறு ராணுவ படை மீது பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு வன்முறையாளர் நேற்று கொல்லப்பட்டனர்.

இதேபோல் ஆங் பைங் நைர் பகுதியிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலையும் சேர்ந்து ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலங்களுடன் கத்திகளும், தடிகளும் கண்டெடுக்கப்பட்டன.

முன்னதாக வங்கதேச எல்லையில் உள்ள இதே பகுதிகளில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் ராணுவ மரியாதையுடம் அடக்கம் செய்யப்பட்டது.

-Malai Malar-

LEAVE A REPLY