போதையற்ற பிரதேசம் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு

0
326

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் நகரை ‘போதையற்ற பிரதேசமாக’ மாற்றியமைக்கும் போதையொழிப்பு விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் இன்ஷா அழ்ழாஹ் நாளை மறுதினம் (14) வெள்ளிக்கிழமை போதையொழிப்புப் பற்றிய மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

ஏறாவூர் வாவிக்கரையில் அமைந்துள்ள டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டுத் திடலில் இந்நிகழ்வு மாலை 4.00 மணியிலிருந்து இரவு 10.00 மணிவரை இது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதில் போதையொழிப்புப் பற்றிய பல்வேறு பிரச்சார நிகழ்வுகளும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக போதையொழிப்பு விழிப்புணர்வுளை வழங்குதல், போதையொழிப்புக்காக மாணவர்கள் மத்தியில் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தல், முக நூல்களின் ஊடாக பிரச்சாரம் செய்தல், போதையொழிப்பில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை தமது அமைப்பு தொடர்ச்சியாக அமுலாக்கவுள்ளதாக ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் நிருவாகம் மேலும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY