அன்சிலின் முறுகலும் இலங்கை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய கோணமும்

0
533

சில நாட்களாக அன்சில் – ஹக்கீம் முறுகல் விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகவும் சூடு பிடித்துக் காணப்பட்டது. தற்போது அதன் சூடு அன்சிலின் அறிக்கையால் தணிக்கப்பட்டுள்ளது.

இங்கு அன்சிலுக்கும் ஹக்கீமிற்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை ஒரு பேசு பொருளல்ல. ஒரு கட்சிக்குள் பிரச்சினைகள் தோன்றுவது சாதாராண விடயம் தான். இப் பிரச்சினை எதனால் ஏற்பட்டது என்பது தான் நாம் சிந்திக்கத்தக்க விடயமாகும்.

தேர்தல் முறை மாற்றத்தில் மு.கா கட்சியின் உயர் பீட உறுபினர்களுடன் எதுவித கலந்துரையாடலுமின்றி ஒரு வரைபை முன் வைத்துள்ளது. தேர்தல் முறை மாற்றம் என்பது ஒரு சிறிய விடயமல்ல. அதில் ஏதேனும் சிறு தவறு இடம்பெற்றாலும் அதனை சரி செய்துகொள்ள பல தசாப்தங்கள் எடுக்கலாம்.

இப்படியான வரைபை எது வித கலந்துரையாடலுமின்றி அமைத்ததன் மூலம் அமைச்சர் ஹக்கீம் தனது கருத்தை சர்வாதிகாரப் போக்கில் திணிக்க எத்தணிக்கின்றாரா? என்ற வகையில் பலரும் சிந்தித்தாலும் அமைச்சர் ஹக்கீம் யாரினதும் நிகழ்ச்சி நிரலை தனது கட்சியின் முடிவாக வெளிப்படுத்தினாரா? என்ற வகையில் பலரும் சிந்திக்க மறந்துவிட்டனர். ஒருவரது நிகழ்ச்சி நிரலை பகிரங்க விவாதத்திற்கு உட்படுத்தினால் அதன் கரு சிதைக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளதல்லவா?

சர்வாதிகாரப் போக்கில் சில நன்மைகளும் ஏற்படலாம். ஆனால், சிலரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆடுவதில் முஸ்லிம் சமூகம் மிகக் கடும் பாதிப்பை எதிர் நோக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இதில் வினாக்களை எழுப்பு முன்பு அன்சில்

“இதன் போது நான் இவ் வினாக்களை முன் வைக்காது போனால், இதன் பிறகு இது தொடர்பில் எனக்கு கதைக்க சந்தர்ப்பம் கிடைக்காதெனக்” கூறியிருந்தார்.

குறித்த இடத்தில் அன்சிலின் வினாக்கள் கேட்க பொருத்தமற்றவையாக இருந்தாலும் குறித்த வினாக்களை கேட்க அன்சிலுக்கு ஒரு சந்தர்ப்பத்தை மு.கா வழங்கியிருந்தால் இந்த பிரச்சின தோன்றியிருக்காது.

இப்படி இருக்கையில் குறித்த இடத்தில் அன்சில் இவ் வினாக்களை விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டமை பிழையாகாது. அன்சில் அவ்விடத்தில் வாய் திறக்காதிருந்தால் இவ் உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்காது. இவ் வரைபு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற பொருளையும் வழங்கியிருக்கும். அங்கு கூடியிருந்த அனைவரும் மௌனியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாலு பேர் சேர்ந்து வாரையுமளவு இது சாதாரண விடயமா? இது தான் ஒரு முக்கியமான விடயத்தை ஒரு கட்சி அணுகும் வழி முறையா? முஸ்லிம் சமூகம் ஆழச் சிந்திக்க வேண்டிய தருணமிது. குறிப்பாக இது தொடர்பான அன்சிலின் அறிக்கையில் கூட தனது கேள்விகள் சரியானவை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இடத்தின் பிழையால் விடுத்த வினாக்கள் ஒரு போதும் பிழையாகப் போவதில்லை. அன்சிலின் வினாக்களுக்கு மு.காவின் தலைவர் பதில் அளிப்பாரா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

LEAVE A REPLY