80 வருட வரலாற்றில் முதற்தடவை சித்தியடைந்த மாணவனை நேரில் சென்று பாராட்டினார் பிரதியமைச்சர் அமீர்அலி

0
295

(வாழைச்சேனை நிருபர்)

தரம் ஐந்து புலமைப் பரிசீல் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை நாசிவந்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 80 வருட வரலாற்றில் முதற்தடவையாக இம்முறை சித்தியடைந்த மாணவனையும் அவனுக்கு கற்பித்த ஆசிரியரையும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இன்று (11) பாடசாலைக்கு நேரில் சென்று பாராட்டியதுடன் அன்பளிப்பும் வழங்கி வைத்தார்.

நாசிவந்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக 164 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த திலிப்குமார் சனுஜன் என்ற மாணவனுக்கும் கற்பித்த ஆசிரியர் ஏ.மோகன்ராஜ் ஆகியோரை வாழ்த்தியதுடன் இருவருக்கும் அன்பளிப்பும் வழங்கி வைத்தார்.

மாணவனின் கல்வித் தேவை தொடர்பாக எப்போது தேவை ஏற்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் தான் உதவுவதற்கு தயாராகவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

அதாவது 1936ம் ஆண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் எவரும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை 2016ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசீல் பரீட்சையில் திலிப்குமார் சனுஜன் என்ற மாணவன் 164 புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளதாக பாடசாலை அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் பிரதி அமைச்சரிடம் தெரிவித்தார்.

LEAVE A REPLY