சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த தடை

0
168

சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறுவர்கள் பலரும் அடிமையாகி வருகின்றனர். சுமார் 23% சிறுவர்கள் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையானதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் சைபர்பேஸ் துறையினர் நள்ளிரவு தொடங்கி காலை 8 மணி வரை சிறுவர்கள் இணையம் பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.

இரவில் விளையாட வருபவர்கள் தங்களது வயது குறித்த ஆவணங்களை ஆன்லைன் கேம் சென்டர் நடத்துபவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் இந்த மாத இறுதிவரை கருத்துத் தெரிவிக்கலாம் என்றும் சைபர்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY