உலக பெண்பிள்ளைகள் தினத்தை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக் கழக சமூகத்தால் ஊர்வலம்

0
198

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

உலக பெண்பிள்ளைகள் தினத்தை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் செவ்வாயன்று (ஒக்ரோபெர் 11, 2016) மாபெரும் ஊர்வலம் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி செங்கலடி மகா வித்தியாலயத்தில் முடிவுற்ற இந்த ஊர்வலத்தில் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள், மற்றும் பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

“சிறுமிகள் எமக்கு மிக மிக முக்கியமானவர்கள், சிறுமிகள் விஷேடமானவர்கள், சிறுமிகளை நாம் கண்ணெனப் பாதுகாப்போம், இளவயதுத் திருமணத்தினை இல்லாதொழிப்போம், பால்நிலை சமத்துவத்துவத்தினை உறுதிப்படுத்துவோம், பாலியல் துஷ்பிரயோகங்களிலிருந்து சிறுமிகளைப் பாதுகாப்போம், சிறுமிகளுக்கு கல்வியில் சமவாய்ப்பு, சிறுமிகள் சுகாதார மற்றும் சட்டத் தேவைகளை சமமாகப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவோம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

பெண்பிள்ளைகள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கும், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் முன்னேறுவதற்கான வாய்ப்புக்;கள் ஆகியவற்றில் அதிகமான பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதை கருத்தில் கொண்டு ஐ.நா சபை 2012ஆம் ஆண்டு முதல் ஒக்டோபர் மாதம் 11ம் திகதியை உலக பெண் பிள்ளைகள் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY