கல்விப் பின்னடைவுக்கு வலயக் கல்விப் பணிமனையை மாத்திரம் குறை கூற முடியாது

0
396

-உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜெய்னுதீன் பாத்திமா றிப்கா-

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

jeinudeen-fathima-rifka-adeமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர்க் கோட்டப்பிரிவில் அவதானிக்கப்பட்டுள்ள கல்விப் பின்னடைவுக்கு வலயக் கல்விப் பணிமனையை மாத்திரம் குறை கூற முடியாது என உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜெய்னுதீன் பாத்திமா றிப்கா தெரிவித்தார்.

இம்முறை ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திடைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஏறாவூர்க் கல்விக் கோட்டப் பிரிவில் வீழ்ச்சிடைந்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் தெரிவித்த அவர்ளூ கடந்த ஆண்டு ஏறாவூர்க் கோட்டத்தில் 73 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளைத் தாண்டி சித்தியடைந்திருந்தனர். இவ்வாண்டு 74 பேர் சித்திடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பெற்றோரினதும், பாடசாலைகளினதும் பங்களிப்புக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

வலயக் கல்விப் பணிமனை கல்வி அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக பாடசாலைகளை மேற்பார்வை செய்யலாம், ஏனைய உதவிகளையும் பாடசாலைகளுக்குச் செய்யலாம். ஆனால் அங்கிருக்கின்ற பாடசாலை நிருவாகங்கள் சிறப்பாகச் செயற்பட வேண்டும்.

அதேவேளை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கான பங்களிப்பை மிகச் சிறப்பாகச் செய்து வந்துள்ளது.

இப்பொழுது இந்தக் கல்வி வலயத்தில் ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 70 புள்ளிகளுக்கு மேல் பெறும் மாணவர்களின் வீதம் ஒப்பீட்டளவில் அதிகரித்திருக்கின்றது. இந்த அடைவு மட்டத்தையே உலக வங்கியும், கல்வித் திணைக்களமும் கருத்திலெடுக்கின்றன. பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் வெட்டுப் புள்ளியைத் தாண்டவில்லை என்பதற்காக கல்வி அடைவு மட்டம் குறைந்து விட்டது என மதிப்பிட முடியாது’ என்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 336 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளைத் தாண்டி சித்தியடைந்திருந்த அதேவேளை இவ்வாண்டு 350 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY